இந்தியா

மம்தா சொல்வது போல் அவரை யாரும் தாக்கவில்லை… வெளியான விசாரணை அறிக்கை!

Published

on

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சிலர் தாக்கியதாகவும் அதனால் அவர் காயம் அடைந்துள்ளதாகவும் மம்தா புகார் தெரிவித்திருந்தார்.

மாநில தேர்தல் நெருங்கும் சூழலில் மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க ஆணையம் அமைக்கப்பட்டு அறிக்கை அளிக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், தற்போது தேர்தல் ஆணையத்திடம் மம்தா பானர்ஜி தாக்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரணை அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தி உள்ளது போல் அவரை யாரும் தாக்கவில்லை என்றும் கார் கதவில் மோதி தான் காலில் அடிபட்டுள்ளது என்றும் விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை உடனடியாக மக்களிடம் வெளிப்படையாக தேர்தல் ஆணையம் தெரிவிக்க வேண்டும் என பாஜக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இன்று கூட மம்தா பானர்ஜி அடிபட்ட கால் உடன் சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு தனது தேர்தல் பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார். தேர்தல் ஆணையம் மம்தா பாதுகாப்பு சரி வர கொடுக்கப்படவில்லை என எஸ்.பி உள்ளிட்ட சில போலீஸ் அதிகாரிகளை இடை நீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version