தமிழ்நாடு
மதுரை தமுக்கம் மைதானம் இடிக்கப்படுகிறது
மதுரை தமுக்கம் மைதானம் இடிக்கப்படுகிறது
மதுரையில் 100 ஆண்டுகள் பழமையான தமுக்கம் மைதானம் இடிக்கப்படுகிறது .நகரின் மையப் பகுதியில் இருக்கும் தமுக்கம் மைதானம்,மதுரையின் அடையாளங்களில் மிகவும் முக்கியமானது . இது மதுரை மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ரூபாய் 4.08 கோடியில் மதுரை தமுக்கம் மைதானம் புதுப்பிக்கப்படுகிறது .கடந்த வாரம் முதலமைச்சர் கோப்பைக்கான கால்பந்து போட்டி கடைசியாக நடந்தது .அதன் பின் எந்த நிகழ்ச்சிகளும் நடக்க வில்லை .
இன்று மைதானத்தை இடிக்கும் பணி தொடங்கியது .2021 மார்ச் மாதத்திற்குள் பணிகள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது .
மதுரையின் முக்கிய நிகழ்வான சித்திரைத் திருவிழாவின் போது இங்கே கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம் .இந்த ஆண்டு மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள மைதானத்தில் கண்காட்சி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.