செய்திகள்

போலந்து மற்றும் உக்ரைன் பயணத்தை முடித்து டில்லி திரும்பினார் பிரதமர் மோடி!

Published

on

புதுடில்லி: அரசு முறை பயணமாக போலந்து மற்றும் உக்ரைன் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, தனது பயணத்தை நிறைவு செய்து இன்று டில்லி திரும்பினார்.

போலந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து, இரு நாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து ஆலோசனைகள் நடத்தினார். அவர் அங்குள்ள போர் வீரர்கள் மற்றும் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் மற்றும் இந்திய வம்சாவளியினரையும் சந்தித்து உரையாடினார்.

அதைத்தொடர்ந்து, மோடி ரயில் மூலம் உக்ரைன் சென்றார். அங்கு போரில் உயிரிழந்த குழந்தைகள் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கு இடையே நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இத்தனை நிகழ்ச்சிகளையும் நிறைவு செய்து, பிரதமர் மோடி இன்று டில்லி திரும்பினார்.

Poovizhi

Trending

Exit mobile version