சினிமா செய்திகள்

பாலிவுட் செல்கிறாரா இயக்குநர் விக்னேஷ் சிவன்… அமீர்கான் வீட்டில் வைரல் போட்டோ!

Published

on

தமிழில் சில படங்களே இயக்கி இருந்தாலும் கவனிக்கத்தக்க வகையில் உலா வருகிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

தமிழில் தற்போது விஜய் சேதுபதி- நயன்தாரா- சமந்தா உடன் இணைந்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தை இயக்கி வருகிறார். மேலும், படங்கள் வாங்கி வெளியிடுதல், புதிய படங்களைத் தயாரித்தல் என்று பிஸியாக உலாவி வருகிறார். நயன்தாரா உடனான திருமண செய்திகளில் தொடர்ந்து தென்பட்டும் வரும் விக்னேஷ் சிவன் விரைவில் பாலிவுட் செல்ல உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நேற்று பாலிவுட் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அமீர் கான் தந்து 56-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதற்கு பல தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் வந்திருந்தன. அதேபோல் அமீர் கான் உடன் அவரது வீட்டில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டு அதைத் தனது சமுக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து இருந்தார் விக்னேஷ் சிவன்.

இதனால், விக்னேஷ் சிவன் நடிகர் அமீர் கான் உடன் அடுத்த படத்துக்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் அவரது வீட்டுக்கு கதை சொல்ல சென்று இருக்கலாம் என்றும் செய்திகள் பரவி வருகின்றன.

seithichurul

Trending

Exit mobile version