தமிழ்நாடு

பாஜகவுக்கு தாவுகிறாரா விஜயதாரணி: அமித்ஷா நகர்த்தும் காய்!

Published

on

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் கொடுக்கப்பட்டது என்பதும் அந்த 25 தொகுதிகளை பிரித்துக் கொள்வதில் காங்கிரஸ் கோஷ்டிகள் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது என்பதும் தெரிந்ததே. மேலும் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவு செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் விளவங்காடு தொகுதி எம்எல்ஏ வாக இருக்கும் விஜயதாரணிக்கு இம்முறை சீட் கிடைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 21 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு இன்னும் நான்கு தொகுதிகளில் வெற்றி வேட்பாளர் பட்டியல் அறிவிக்க வேண்டி இருக்கும் நிலையில் அதில் ஒன்று விளவங்காடு தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.

விளவங்காடு தொகுதியை விஜயதாரணிக்கு கொடுக்கக் கூடாது என காங்கிரஸ் கட்சியில் இருப்பவர்களே கூறி வருவதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இதை உற்றுக் கவனித்து வரும் அமித்ஷா விளவங்கோடு தொகுதியில் பாஜக சார்பில் விஜயதாரணிக்கு சீட் கொடுத்து அவரை பாஜகவுக்குள் இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதற்காகத்தான் பாஜக தரப்பில் விளவங்காடு தொகுதி வேட்பாளர் இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

காங்கிரஸ் கட்சியிலிருந்து விஜயதாரணிக்கு சீட் கொடுக்கவில்லை என்றால் அவர் பாஜகவின் விளவங்காடு வேட்பாளராக மாறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

seithichurul

Trending

Exit mobile version