சினிமா
நெல் ஜெயராமன் இறுதி சடங்கு செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்!
![Sivakarthikeyan, Nell Jayaraman, - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/12/Sivakarthikeyan-Nell-Jayaraman.bmp)
புற்றுநோய் பாதிப்பால் போராடி வந்த இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று அதிகாலை 5.10 மணிக்கு சென்னை அப்போலோவில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரது உடலுக்கு ஸ்டாலின், தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும், நெல் ஜெயராமனின் சொந்த ஊரான திருத்துறைப்பூண்டியில் நாளை அவர் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. இதற்கு ஆகும் செலவு அனைத்தையும் தான் ஏற்பதாகவும், நெல் ஜெயராமனின் மகன் படிப்பு செலவையும் தான் ஏற்பதாகவும் நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.