இந்தியா

தாஜ்மஹாலை விட மும்மடங்கு பெரிய கோள்… பூமியைக் கடப்பது எப்போது?

Published

on

தாஜ்மாஹாலை விட மூன்று மடங்கு பெரிய கோள் ஒன்று பூமியை கடக்க உள்ளது.

2008 Go20 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சிறிய கோள் பூமியை வருகிற ஜூலை 24-ம் தேதி கடந்து செல்ல உள்ளது. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் இந்த சிறிய கோள் 18000 மைல் வேகத்தில் வந்து கொண்டு இருக்கிறதாம்.

சூரிய குடும்பத்தைச் சுற்றி சுழன்று கொண்டிருக்கும் பல சிறுகோள்களைப் போலவே 2008 Go20 கோளும் ஒன்று. இந்த கோள் வருகிற ஜூலை 24-ம் தேதி நள்ளிரவு 1 மணி அளவில் பூமியைக் கடக்கும் என நாசா தெரிவித்துள்ளது. மேலும், நாசா தொடர்ந்து இந்தக் கோளின் பயணத்தைக் கண்காணித்து வருகிறது. இந்த சிறு கோள் பூமியைக் கடந்து செல்லுமே தவிர பூமிக்கு எந்தவித சேதாரத்தையும் ஏற்படுத்தாது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சிறு கோள் பூமியைக் கடந்து செல்லும் போது மிகவும் அருகில் பயணிக்குமாம். அதாவது கடக்கும் போது அந்த சிறு கோளுக்கும் பூமிக்கும் இடையேயான தூரம் 3,718,232 மைல்கள் ஆகும்.

 

seithichurul

Trending

Exit mobile version