சினிமா செய்திகள்

செல்வராகவனை மிஸ் பண்ணும் சோனியா அகர்வால்!

Published

on

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அவரது நடிப்பை பார்த்த தமிழ் திரையுலக ரசிகர்கள் தனுஷை போலவே திவ்யா.. திவ்யா.. என்று கொண்டாடி வந்தனர்.

அதன் பின்னர், மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை படங்களில் நடித்தவர், பின்னர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால், பின்னர் சில பல காரணங்களுக்காக இருவரும் பிரிந்து விட்டனர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் என்ஜிகே திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சோனியா அகர்வால் நடிப்பில் கடந்த வாரம் தனிமை படம் வெளியானது.

அந்த படத்திற்கான புரமோஷனுக்காக சோனியா அகர்வால் அளித்த பேட்டியில், இப்போ செல்வராகவனை மிஸ் பண்றீங்களான்னு கேட்கப்பட்ட கேள்விக்கு?

ரொம்ப மிஸ் பண்றேன்னு சொல்ல முடியாது. ஆனா, மிஸ் பண்றேன் என கூறிவிட்டு அடுத்த கேள்விக்கு சென்றுவிட்டார்.

சமீபத்தில் வெளியான தடம் படத்தில் அருண் விஜய்யின் அம்மாவாக சோனியா அகர்வால் நடித்திருந்தார். வரும் மே 10ம் தேதி வெளியாகவுள்ள விஷாலின் அயோக்யா படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் சோனியா நடித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version