சினிமா
சிவகார்த்திகேயன் ‘என் ஆசை அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்’ டிவிட்டர் வீடியோ
என் மகள் வெண்ணிலாவும் மகன் சர்வானும் வாங்கிக் கொடுத்த பிரமாண்டமான வீட்டில் முதன்முறையாக ஆடம்பரமாக என் பிறந்த நாளை கொண்டாடினேன்... வீடு வாங்கிக் கொடுத்த செல்லங்களுக்கு நன்றி! pic.twitter.com/BmTKpzd3V2
— Actor Soori (@sooriofficial) August 27, 2018
என் ஆசை அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்? எல்லாரையும் சந்தோஷப்படுத்துற நீங்க எப்பவும் சந்தோஷமா இருக்கனும்ணே??❤️ #HappyBirthdaySoori pic.twitter.com/7BGGRUhu4c
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 27, 2018
சென்னை: மகள் வெண்ணிலா வாங்கிக் கொடுத்த வீட்டில் கேக் வெட்டி தனது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார் நடிகர் சூரி.
1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 27-ம் தேதி மதுரைக்கு அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த நடிகர் சூரிக்கு சிறு வயது முதலே சினிமா ஆர்வம் அதிகம். இதனால் சென்னைக்கு வந்த சூரி 1999-ம் ஆண்டு நினைவிருக்கும் வரை என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தார். அதற்குப் பின்பு 10 ஆண்டுகள் கழித்து வெண்ணிலா கபடி குழு படத்தின் பரோட்டா உண்ணும் காட்சி மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அன்றிலிருந்து சூரி என்ற அவரது பெயர் பரோட்டா சூரியாக மாறியது.
பிரபலங்கள் பிறந்தநாள் எல்லாம் ரசிகர்களே நியாபகம் வைத்திருப்பார்கள். ஒரு சிலரின் ஸ்பெஷல் தினங்கள் சமூக வலைத்தளம் வந்தாலே தெரிந்துவிடும்.
அப்படி இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வருபவர் காமெடி நடிகர் சூரி. இவரது பிறந்தநாளுக்குச் சிவகார்த்திகேயன் முதல் பல பிரபலங்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
சூரி இன்று தனது 41வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். சூரியின் மகன் மற்றும் மகள் வெண்ணிலா வாங்கிக் கொடுத்த பொம்மை வீட்டில் கேக் வெட்டி பிரமாண்டமாகப் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். தனது பிள்ளைகளுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடியபோது எடுத்த வீடியோவை அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.