செய்திகள்

சாம்சங் ஊழியர்களுக்கு மாதம் ரூ.5000 ஊதிய உயர்வு – தமிழக அரசு முடிவு!

Published

on

தமிழகத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவன ஊழியர்களுக்கு பெருந்தாக்கம் கிடைத்துள்ளது. கடந்த செப்டம்பர் 9ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் இருந்த சாம்சங் (SAMSUNG) நிறுவன ஊழியர்கள், அவர்களின் சம்பள உயர்வுக்கு போராடி வந்தனர். இதனால், தமிழக அரசு மத்தியஸ்தமாக, சாம்சங் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொழிலாளர்களுக்கு பெரும் நிவாரணத்தை வழங்கியுள்ளது.

தற்போதைய பேச்சுவார்த்தையில், சாம்சங் நிறுவன ஊழியர்களுக்கு மாதம் ரூ.5000 இடைக்கால ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 2024 முதல் மார்ச் 2025 வரை அமல்படுத்தப்படும். இந்த ஊக்கத்தொகை 2025-26ம் நிதியாண்டில் வழங்கப்படும் வருடாந்திர ஊதிய உயர்வுடன் இணைக்கப்படும்.

மேலும், சாம்சங் நிறுவனம் ஆண்டு தோறும் தொழிலாளர்களின் குடும்ப நிகழ்ச்சிகளின் எண்ணிக்கையை 4 லிருந்து 6 ஆக உயர்த்துவதுடன், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ரூ.2000 மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படும்.

பணி நேரத்தில் தொழிலாளர் மரணமடைந்தால் அவரது குடும்பத்துக்கு கூடுதலாக ரூ.1,00,000 வழங்கப்படும். தொழிலாளரின் குழந்தை பிறப்பு அல்லது திருமணத்திற்கு கூடுதலாக ரூ.2000 பரிசாக வழங்கப்படும். மேலும், திருமணமாகும் ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டு, தந்தையர்களுக்கு மகப்பேறு விடுப்பு 3 நாட்களிலிருந்து 5 நாட்களுக்கு உயர்த்தப்படும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://www.bhoomitoday.com/ என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்

Poovizhi

Trending

Exit mobile version