இந்தியா

குழந்தைகளுக்கு மூக்கின் வழியாக கொரோனா தடுப்பு மருந்து..!

Published

on

கொரோனா தடுப்பு மருந்தை குழந்தைகளுக்கு மூக்கின் வழியாக செலுத்துவதற்கான வழியை மேற்கொள்ள உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று நாடாளுமன்றத்தில் பேசும் போது குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பு மருந்து சொட்டு மருந்து போல் மூக்கின் வழியாக மேற்கொள்வதற்கான பரிசோதனைகள் வெற்றிகரமாக நடந்து வருவதாகக் கூறினார். பாரத் பயோடெக் நிறுவனம் தான் குழந்தைகளுக்கான சொட்டு மருந்து கொரோனா தடுப்பு மருந்துகளை வெற்றிகரமாகத் தயாரித்து வருவதாகவும் கூறினார்.

இதேபோல், 18 வயது குறைவான சிறுவர்கள், சிறுமியர்களுக்கு ஏற்ற கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையும் நடைபெறுவதாகக் கூறினார். அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட சில ஆய்வுகளிலும் சொட்டு மருந்து போல் மூக்கின் வழியாக செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து வீரியம் மிகுந்ததாகவே இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு இன்னும் அதிக தடுப்பூசிகள் தேவைப்படும் சூழலில் வெளி நாடுகளில் இருந்து தடுப்பூசி இறக்குமதி செய்து கொண்டு வரப்படும் என்றும் மத்திய அரசு கூறி உள்ளது.

seithichurul

Trending

Exit mobile version