தொழில்நுட்பம்

களமிறங்கிய சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன்.!

Published

on

உலகின் முன்னணி நிறுவங்களின் தென் கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் நிறுவனம் சீனாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இன்று மாலை 4 மணிக்கு தனது நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் அறிமுகம் செய்துள்ளது. சாம்சங் நிறுவனம் இன்று தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ்(Samsung Galaxy A8s) ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துவுள்ளது.

இன்றைய நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன், உலகின் முதல் இன்பினிட்டி ஓ டிஸ்பிளே (Infinity-O Display) கொண்ட ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் பற்றிய டீஸர் பதிவுகளை வீபோ பக்கத்தில் சாம்சங் நிறுவனம் பகிர்ந்துள்ளது.

சாம்சங் நிறுவனம் இன்று மாலை சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் இன் அறிமுக நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பும் செய்துள்ளது. இந்த நிகழ்ச்சி இன்று மாலை 4 மணிக்கு துவங்கியது. சாம்சங் நிறுவனத்தின் சீனா வலைத்தளத்தில் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

 

seithichurul

Trending

Exit mobile version