செய்திகள்

கருவேப்பிலை பானம்: எடை குறைப்பு, ரத்த சர்க்கரையுடன் பல சுகாதார நன்மைகள்!

Published

on

கருவேப்பிலை உணவுகளில் சுவையை அதிகரிக்க பயன்படும் முக்கிய மசாலா பொருளாக இருக்கிறது. ஆனால், இந்த கருவேப்பிலை நீரின் பல்வேறு சுகாதார நன்மைகள் பற்றிய தகவல் உங்களுக்குத் தெரியுமா? கருவேப்பிலை நீரின் பயன்கள் எவை என்பதை இங்கு பார்க்கலாம்.

கருவேப்பிலையின் வைட்டமின்கள், நார்ச்சத்து, இரும்பு, புரதம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடலுக்கு பல நன்மைகளை வழங்குகின்றன. அதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள், உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன.

Curry tree

ரத்த சர்க்கரையின் கட்டுப்பாடு: கருவேப்பிலை நீருக்கு ரத்தச் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. காலையில் வெறும் வயிற்றில் இந்த நீரை குடித்து வருவதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைய உதவுகிறது. இதுவே உங்களுக்கு கொலஸ்ட்ரால் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மையுடன், இதய நோய்களைத் தடுக்க உதவுகிறது.

எடை குறைப்பு: கருவேப்பிலை நீரின் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால் உடலில் கொழுப்பு கூடாமல் தடுக்க உதவுகிறது. கார்பசோல் ஆல்கலாய்டுகள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுவதன் மூலம் அதிகமான கொழுப்பை எரிக்க உதவுகிறது.

அண்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு: கருவேப்பிலை நீரில் இருக்கும் அண்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது பருவகால நோய்களைச் சரி செய்யவும் உதவுகிறது.

செரிமான சக்தி: கறிவேப்பிலை செரிமான சக்தியை வலுப்படுத்துவதன் மூலம், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இதன் நார்ச்சத்து மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்சினைகளைத் தடுக்கும்.

கருவேப்பிலை நீரை தயாரிக்க: சுமார் 250 மில்லி தண்ணீரில் 30 கருவேப்பிலையைச் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கஷாயம் தயாரிக்கவும். இந்த தண்ணீரை வடிகட்டி, சிறிது ஆற வைக்கவும். உங்களால் விரும்பினால், வெல்லம் அல்லது தேன் சேர்த்து இனிப்பாகக் குடிக்கலாம்.

Poovizhi

Trending

Exit mobile version