விளையாட்டு

ஐபிஎல் பெங்களூரு அணி டி-சர்ட் அணிந்துள்ள உசேன் போல்ட்… உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Published

on

ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியின் டி-சர்ட் அணிந்து கொண்டு மின்னல் வேக நாயகன் உசேன் போல்ட் வெளியிட்டுள்ள படம் ஐபிஎல் பெங்களூரு அணி ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளது.

ஐபிஎல் 2021 போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ளது. முதல் போட்டியே பெங்களூரு ராயல் சாலஞ்சரஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையே நடைபெற உள்ளது. இந்நிலையில் ஜமைக்காவைச் சேர்ந்த தடகள வீரரும் மின்னல் வேக நாயகன் என அழைக்கப்படுபவருமான உசேன் போல்ட் பெங்களூரு அணியில் டி-சர்ட் ஒன்றை அணிந்துகொண்டு ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

தடகள வீரர் என்றாலும் உசேன் போல்ட் தனது பள்ளி நாட்களில் கிரிக்கெட் விளையாடி உள்ளார். அப்போது இருந்தே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து கவனித்து வருபவர். தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு விராட் கோலி, ஏபி டிவிலியர்ஸ் ஆகியோரை டேக் செய்து, “இன்னமும் நான் தான் வேகம் என்பதை உங்களுக்குக் காட்டுகிறேன்” எனக் குறிப்பிட அதற்கு விராட் கோலி, “அதனால் தான் உங்களை எங்கள் அணியில் வைத்திருக்கிறோம்” எனப் பதில் அளித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version