உலகம்

இன்று விண்வெளி சுற்றுலாவுக்குக் கிளம்பும் அமேசான் நிறுவனர்- சொந்த ராக்கெட்டில் பயணம்!

Published

on

தனது சொந்த ராக்கெட்டில் இன்று விண்வெளி சுற்றுலாவுக்குக் கிளம்புகிறார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசோஸ்.

அமேசான் நிறுவனரான ஜெஃப் பீசோஸ் சமீபத்தில் தான் தனது சிஇஓ பதவியை விட்டு விலகி தனக்குப் பிடித்த இதர விஷயங்களை செய்யப்போவதாக அறிவித்திருந்தார். ப்ளூ ஆரிஜின் என்னும் நிறுவனத்தைத் தொடங்கி விண்வெளி சுற்றுலா செல்லப் போவதாக அறிவித்திருந்தார். ஜெஃப் பீசோஸ் தனது நிறுவனம் மூலம் தானும் தனது சகோதரரும் இணைந்து விண்வெளிப் பயணம் மேற்கொள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், அவருடன் விண்வெளிக்குப் பயணிக்கு ஒரு டிக்கெட்டும் ஏலத்துக்கு விடப்பட்டது. மிகப்பெரிய பணக்கார வீட்டுப் பிள்ளையும் விண்வெளிப் பிரியருமான 18 வயது இளைஞரான ஆலிவ் டேமன் 28 மில்லியன் டாலர் தொகைக்கு இந்த இடத்தைப் பிடித்துவிட்டார். இன்று ஜெஃப் பீசோஸ், அவரது சகோதரர் மார்க் பீசோஸ் மற்றும் 18 வயது ஆலிவ் டேமன், 82 வயது முன்னாள் பெண் விமானி ஆகியோர் விண்வெளிக்குப் பயணிக்க உள்ளனர்.

ப்ளூ ஆரிஜின் நிறுவனம் மூலம் விண்வெளி சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் விதமாக இந்தப் பயணித்தை முதல் ஆளாக மேற்கொள்கிறார் ஜெஃப் பீசோஸ். இன்றைய பயணத்தில் 100 கி.மீ தொலைவுக்குச் செல்கிறது பீசோஸின் ராக்கென். விமானி இல்லாமல் இந்த ராக்கெட் இயங்கும் என்பது கூடுதல் தகவல்.

Trending

Exit mobile version