இந்தியா

ஆர்பிஐயிடம் ரூ.3.6 லட்சம் கோடி கேட்கும் மத்திய அரசு.. என்ன காரணம்?

Published

on

டெல்லி: மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் மொத்தம் 3.6 லட்சம் கோடி ரூபாய் பணம் கேட்க உள்ளது

மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது.  ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கியிடம் மத்திய அரசு பணம் கேட்க உள்ளது. இதனால் விரைவில் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஆர்பிஐ, தாங்கள் வைத்திருக்க வேண்டிய தொகையை விட அதிக தொகையை சேர்த்து வைத்துள்ளது. இந்த பணத்தை அரசு வங்கிகளிடம் கொடுக்க வேண்டும்.

இது அந்த வங்கிகளின் கடன் தொடர்பான பண பரிவர்த்தனைக்கு உதவும் என்று மத்திய அரசு கேட்டுள்ளது. ஆர்பிஐயிடம் அரசு ஏற்கனவே இந்த் பணத்தை கேட்டுவிட்டதாகவும் தகவல்கள் வருகிறது.

 

 

 

 

 

seithichurul

Trending

Exit mobile version