உலகம்

ஆப்கான் தலைநகரைக் கைப்பற்றிய தலிபான்கள் – பதற்றத்தில் உலக நாடுகள்!

Published

on

ஆப்கான் பாதுகாப்புப் படைக்கும் தலிபான் தீவிரவாத குழுவுக்கும் கடந்த பல ஆண்டுகளாக அந்நாட்டில் உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. தற்போது அந்தப் போர் உச்சம் அடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தலிபான்கள் கை, ஆப்கானில் ஓங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அவர்கள், தலைநகர் காபூலைக் கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வந்து உள்ளன.

காபூல் நகரில் இன்னும் பல நாட்டு பாதுகாப்பு வீரர்களும், பல நாட்டைச் சேர்ந்த குடிமக்களும், தூதரக ஊழியர்களும் இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இப்படியான சூழலில் தலிபான்கள், காபூல் நகரத்தைக் கைப்பற்றி உள்ளதால், நகரில் போர் மூளும் என்கிற அபாயம் உள்ளது.

இதனால் பல உலக நாடுகளும் தங்கள் குடிமக்களை காபூலில் இருந்து அழைத்து வர நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன.

அதே நேரத்தில் ஆப்கான் அதிபர் அஷ்ரஃப் கானி தரப்பு, காபூல் இன்னும் தங்கள் வசம் தான் உள்ளது என்று கூறி வருகிறது. ஆனால், கடந்த சில நாட்களாக தலிபான்கள், ஆப்கானின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version