சினிமா செய்திகள்
அந்தாதுன் தமிழ் ரீமேக் படத்தில் இணைந்த வனிதா விஜயகுமார்..!
அந்தாதுன் தமிழ் ரீமேக் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிப்பதற்கு நடிகை வனிதா விஜயகுமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
பாலிவுட்டில் வெளியாகி பெரும் ஹிட் அடித்த படம் அந்தாதுன். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் நாயகன் ஆக நடிகர் பிரசாந்த் கமிட் ஆகியுள்ளார். வில்லி ஆக நடிகை சிம்ரன் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதற்கு நடிகை வனிதா விஜயகுமார் ஒப்பந்தம் ஆகியுள்ளார். விரைவில் இந்தப் படத்தில் நடிப்பதற்கு இணைய இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாக வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். தமிழ் ரீமேக் படத்துக்கா அந்தாகன் எனப் பெயர் இட்டுள்ளனர்.
All the best from the bottom of my heart @actorprashanth …kill it…cant wait to join the team https://t.co/Pdxb2cdksF
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) March 10, 2021