சினிமா செய்திகள்

ஃபோரம் மால் வளாகத்தில் நடந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு- வைரலாகும் சூப்பர்ஸ்டார் வீடியோ!

Published

on

சென்னை வடபழனி ஃபோரம் மால் வளாகத்தில் நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. இந்தப் படத்தில் நாயகிகள் குஷ்பூ, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்துக்கான படப்பிடிப்பு தற்போது சென்னை வடபழனியில் உள்ள ஃபோரம் மால் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று இரவு ஜூலை 20-ம் தேதி ஃபோரம் மாலில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். படப்பிடிப்பு நிறைவடைந்த உடன் கேரவனிலிருந்து தனது காருக்கு ஏறச் செல்லும் போது சுற்றியிருந்த ரசிகர்கள் கூச்சலிட்டனர். ரசிகர்களுக்கு கையை உயர்த்தி வணக்கம் தெரிவித்த பின்னர் ரஜினிகாந்த் தனது காரில் ஏறி கிளம்பினார்.

இந்தக் காட்சியை வீடியோவாக எடுத்த ரசிகர்கள் சமுக வலைதளங்களில் வெளியிட தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. சென்னை ஃபோரம் மால் என்பதால் ரசிகர்களின் கூட்டமும் அங்கு அதிகரித்துள்ளதாம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version