தொழில்நுட்பம்

வெற்றிகரமாக பூமி திரும்பிய ஜெஃப் பீசோஸ்… பிரபலமாகுமா விண்வெளி சுற்றுலா?

Published

on

அமேசான் நிறுவனர் ஜெஃப் பீசோஸ் தனது சொந்த ராக்கெட் மூலமாக விமானி யாரும் இன்றி விண்வெளி சுற்றுலாப் பயணத்தை நிறைவு செய்து திரும்பி உள்ளார்.

ஜெஃப் பீசோஸ், அவரது சகோதரர் மார்க் பீசோஸ் மற்றும் 18 வயது ஆலிவ் டேமன், 82 வயது முன்னாள் பெண் விமானி வேலி ஃபங்க் ஆகியோர் விண்வெளிக்குப் பயணித்தனர். இதில் விண்வெளி சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட இளம் நபர் என்ற பெருமையை ஆலிவ் டேமனும் மிகவும் வயதான விண்வெளி சுற்றுலாப் பயணி என்ற பெருமையை வேலி ஃப்ங்க் ஆகியோரும் பெற்றனர்.

தரையில் இருந்து சுமார் 3.50 லட்சம் அடி உயரத்திற்கு பறந்து வெற்றிகரமாக திரும்பியது ஜெஃப் பெசாஸ் சென்ற ராக்கெட். சுமார் 11 நிமிடங்கள் கொண்டதாக இந்தப் பயணம் அமைந்தது. ஜெஃப் பீசோஸ் தனது ப்ளூ ஆர்ஜின் நிறுவனம் மூலமாகத் தொடர்ந்து விண்வெளி சுற்றுலாப் பயணங்களை கட்டணத்துடன் அறிவிப்பார் எனத் தெரிகிறது. மில்லியன் டாலர்கள் கணக்கில் கட்டணம் வைத்தாலும் பலரும் இந்த விண்வெளி சுற்றுலாவுக்குச் செல்ல ஆர்வம் காட்டுவர் என்றே கூறப்படுகிறது.

Trending

Exit mobile version