தொழில்நுட்பம்

விமான நிலையங்களில் ரோபோட் நாய்கள் விரைவில் அறிமுகம்,!

Published

on

மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட பாதுகாப்பு படை நாய்களை நீக்கிவிடப் போவதாக பாதுகாப்புப் படையின் கலந்தாய்வில் டெஹ்ரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றிற்குப் பதிலாக ரோபோட் ஃபேக்டரியில் உருவாக்கப்படும் ரோபோட் நாய்களைப் பாதுகாப்பு படையில் சேர்க்க மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.

ஜெர்மன் ஷெப்பர்ட், லாப்ரடர்கள் மற்றும் பெல்ஜியன் மாலினோயிஸ் வகை நாய்களை பயிற்சியளித்து விமான நிலைய பாதுகாப்பிற்காக மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை பயன்படுத்தி வந்தது. தற்பொழுது பாதுகாப்பு பணியில் பணிபுரியும் நிஜ நாய்களுக்குப் பதிலாக ரோபோட் நாய்களைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளது.

முன்னேறிய நாடுகளான அமெரிக்கா, கனடா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் ரோபோட் நாய்களே விமான நிலைய பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளது. அதிநவீன தொழில்நுட்பத்தினால் இந்த ரோபோட் நாய்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோட் நாய்கள் நிஜ நாய்களைப் போலவே, வெடிகுண்டு மற்றும் போதை பொருள் இருக்கும் இடங்களை மிகத் துல்லியமாக மோப்பம் பிடித்து விடுகின்றன. அதே போல் விமான நிலையத்தில் உள்ள பயணிகளின் பொருட்களை அதன் கண் வழியாக எக்ஸ்-ரே எடுத்து நொடியில் சோதனை செய்கின்றது.

அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விமான நிலையங்களில் சி.டி ஸ்கேன், ஏ.ஐ பாதுகாப்பு, வெடிகுண்டு டிடெக்டர்கள், சென்சார்கள் மற்றும் பயோமெட்ரிக் முறை எனப் பல பாதுகாப்பு முறைகளை அறிமுகம் செய்யவுள்ளதாக மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் கலந்தாய்வில் தெரிவிக்கப்பட்டது.

Trending

Exit mobile version