சினிமா செய்திகள்
விஜய்சேதுபதி வெளியிட்ட கண்ணே கலைமானே டிரைலர்!
சீனுராமசாமி இயக்கத்தில் உதய்நிதி ஸ்டாலின் தயாரித்து நடித்திருக்கும் கண்ணே கலைமானே படத்தின் டிரைலரை தற்போது ட்விட்டரில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார்.
தர்மதுரை படத்திற்கு பிறகு சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் உதய்நிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்.
மண் மனம் மாறாமல் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் அழகாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதய்நிதி ஸ்டாலினை நிமிர் படத்தில் பார்த்தது போன்றே உள்ளது.
நிலத்தை வங்கியில் அடகு வைத்து, அதை மூட்ட முடியாமல் தவிக்கும் கதையா? அல்லது விவசாய நிலத்தை பறிகொடுக்கும் விவசாயிகளின் வலியாக திரைக்கதை இருக்கும் என்பதை டிரைலர் உணர்த்துகிறது.
வங்கி அதிகாரியாக தமன்னா இந்த படத்தில் நடித்துள்ளார். என்பதும் வங்கி அதிகாரி என்ற வைரமுத்துவின் பாடலும் மனதை வருடுகிறது.