தொழில்நுட்பம்

ரெட்மி 9 சீரிஸ் இன்னும் முடிந்தபாடில்லை..! கூடுதல் அம்சங்களுடன் களமிறங்கும் சூப்பர் ஸ்மார்ட்போன்!!

Published

on

ரெட்மி நிறுவனம் தனது 9 சீரிஸில் மற்றுமொரு ஸ்மார்ட்போனை களம் இறக்க உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இங்குக் காணலாம்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னனி நிறுவனமான ரெட்மி கடந்தாண்டு மார்ச் மாதம் ரெட்மி 9 சீரிஸை அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலையில் தொடங்கி பிரீமியம் விலை வரையில் அனைத்து தரப்பினரையும் கைக்குள் போட்டு பல ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துவிட்டது.

அதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் ஒரு 9 சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் பெயர் ரெட்மி நோட் 9T ஆகும். இதற்கு முந்தைய பதிப்புகளைக் காட்டிலும் இதில் உள்ள சிறப்பம்சங்கள் சற்று கூடதலாகவே உள்ளன.

ரெட்மி நோட் 9 சிறப்பம்சங்கள்:

மெமரி: 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி

டிஸ்ப்ளே:  6.53 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி + எல்சிடி

கேமரா அமைப்பு: ட்ரிபிள் ரியர் கேமரா

மெயின் கேமரா: 48 எம்பி

சார்ஜிங் : 18W ஃபாஸ்ட் சார்ஜிங்

பேட்டரி : 5000 எம்ஏஎச்

ஆண்ட்ராய்டு: ஆண்ட்ராய்டு 10 ஓஎஸ்

மற்ற அம்சங்கள்:  5 ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5, 3.5 மிமீ ஹெட்ஜாக், யூ.எஸ்.பி டைப்-சி போர்டு

விலை:
 64 ஜிபி ஸ்டோரேஜ் = ரூ.20,599
128 ஜிபி =  ரூ.24,199

Trending

Exit mobile version