சினிமா செய்திகள்

ரிலீஸ் பிரச்னை காரணமாக அடிவாங்கிய அயோக்யா வசூல்!

Published

on

விஷால் நடிப்பில் நேற்று வெளியான அயோக்யா திரைப்படம் தமிழகம் முழுவதும் 2.5 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. சென்னையில் மட்டும் இந்த படம் வெறும் 34 லட்சம் வசூலை ஈட்டியுள்ளது.

வெள்ளிக்கிழமையன்று படம் வெளியாகி இருந்தால், இரண்டு நாள்களில் படத்தின் வசூல் 10 கோடியை தொட்டு இருக்கும் நிலையில், ரிலீஸ் பிரச்னை காரணமாக படத்தின் வசூல் படு மோசமாக மாறியுள்ளது.

இதற்கு முன் வெளியான காஞ்சனா 3 மற்றும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் நல்ல வசூலை ஈட்டிய நிலையில், இந்த வாரம் வெளியான படங்கள் ரிலீஸ் பிரச்னையால், தியேட்டருக்கு ரசிகர்கள் வராமல் வசூல் குறைந்துள்ளது. ஞாயிற்றுக் கிழமையான இன்று படம் ஓடினால், மட்டுமே போட்ட பணத்தில் பாதியாவது வரும் என தயாரிப்பு தரப்பு புலம்பி வருகிறது.

அடுத்த வாரம் சிவகார்த்திகேயன் நடிப்பில் மிஸ்டர் லோக்கல் படம் வெளியாகிறது. மேலும், இரண்டு படங்கள் வெளியாகும் வாய்ப்பு உள்ளதால், இந்த வாரம் அயோக்யா படம் ஓடவில்லை என்றால், தயாரிப்பு தரப்புக்கு மாபெரும் இழப்பாக அது மாறிவிடும் என்ற நிலை உள்ளது.

2015ம் ஆண்டு தெலுங்கில் வெளியான டெம்பர் படம் அப்போதே 75 கோடி வரை வசூல் ஈட்டிய படம் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் ரீமேக்கான அயோக்யா படம் 10 கோடி ரூபாய் வசூலை ஈட்டுமா என்பதே சந்தேகம் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version