சினிமா
ரஜினியின் பிறந்த நாள் ட்ரீட் என்ன தெரியுமா?
ரஜினியின் பிறந்த நாள் ட்ரீட்டாக பேட்ட படத்தின் டீஸர் வெளியாகவுள்ளது என கார்த்திக் சுப்பராஜ் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் 68வது பிறந்த நாள் நாளை ரசிகர்களால் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், பேட்ட இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், ரஜினி ரசிகர்களுக்கு பிறந்த நாள் விருந்தாக பேட்ட படத்தின் டீஸர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்ற சந்தோஷமான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தில், விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், பாபி சிம்ஹா, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா, முனிஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.