தமிழ்நாடு

முதல் நாள் இரவுநேர ஊரடங்கு: சென்னையில் வெறிச்சோடிய சாலைகள்!

Published

on

தமிழகத்தில் நேற்று முதல் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையிலான இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன

தமிழக அரசு அறிவித்த இரவுநேர ஊரடங்கு உத்தரவை அடுத்து நேற்று இரவு 9 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. வணிக வளாகங்கள், திரையரங்குகள், கடைகள், மார்க்கெட் என அனைத்திலும் இருந்து பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வெளியேற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் சென்னையில் இரவு நேர பேருந்துகள் எதுவும் ஓடாததால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர். ஆட்டோ பேருந்துகள் எதுவும் ஓடவில்லை என்பதால் நேற்று இரவு பத்து மணியிலிருந்து சென்னையில் உள்ள முக்கிய சாலைகளான அண்ணா சாலை, காமராஜர் சாலை, 100 அடி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய அனைத்து சாலைகளும் வெறிச்சோடின. அதுமட்டுமின்றி மேற்கண்ட சாலைகள் அனைத்திலும் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

ஊரடங்கை மீறி வெளியே வாகனத்தில் சுற்றிப் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறை எச்சரித்து இருந்ததால் சென்னையில் நேற்று யாரும் வாகனத்தில் வெளியே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இதேபோல் திருச்சி, திண்டுக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சாலைகளும் வெறிச்சோடிக் கிடந்தன என்பதும் இரவு 9 மணிக்கு அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது,. முதல் நாள் ஊரடங்கில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இரவு 10 மணிக்கு அனைவரும் வீட்டில் முடங்கி இருந்தனர் என்றாலும் போகப்போக இதே நிலைமை இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

 

Night lockdown starts at Tamil Nadu

seithichurul

Trending

Exit mobile version