தமிழ்நாடு

மதுரை வீரன் திரைப்படம், கண்ணகி, ராணி மங்கம்மாள்: மதுரையில் பிரதமர் மோடியின் கலக்கல் பேச்சு

Published

on

எம்ஜிஆர் நடித்த ’மதுரை வீரன்’ திரைப்படம் மதுரையின் வீர பெண்களான கண்ணகி, ராணி மங்கம்மாள், ராணி வேலுநாச்சியார் குறித்து பிரதமர் மோடி இன்று மதுரையில் பேசியிருப்பது அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி இன்று மதுரையில் நடந்த பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தில் பேசி வருகிறார். அவர் பேசியதாவது: கண்ணகி, ராணி மங்கம்மாள், ராணி வேலு நாச்சியார் ஆகிய வீரம் மிகுந்த பெண்கள் வாழ்ந்த மண் இந்த மதுரை மண். ஆனால் திமுகவினர் பெண்களை திரும்பத் திரும்ப இழிவு படுத்துகின்றனர்.

மதுரையில் வன்முறை நகரமாக உருவாக்கியவர்கள் இந்த திமுகவினர் தான். காங்கிரஸ் திமுக பல வருடங்கள் ஆட்சியில் இருந்தபோதும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் எம்ஸ் மருத்துவமனை உரிய காலத்திற்குள் கட்டி முடிக்கப்படும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

ஜல்லிக்கட்டு தடை பட்டது காங்கிரஸ் திமுக ஆட்சி காலத்தில் தான். ஜல்லிக்கட்டு ஒரு காட்டுமிராண்டி விளையாட்டு என காங்கிரஸ் கூறியது. ஆனால் ஜல்லிக்கட்டு மறுபடியும் நடைபெற நடவடிக்கை எடுத்தது நாங்கள் தான்.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஓட்டு போடுவது தென் தமிழக வளர்ச்சிக்கான ஓட்டு என்பதை நீங்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நிறைய தொழிற்சாலைகளை தென் தென்மாவட்டங்களுக்கு கொண்டுவருவோம். விவசாயம் சார்ந்த தொழில் கட்டமைப்புகளை தென் தமிழகத்தில் ஏற்படுத்த திட்டம் போட்டுள்ளோம். தென் தமிழகத்தில் பல உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக மதுரை கொல்லம் போக்குவரத்து வழித்தடம் மேம்படுத்தப்படும் என்று கூறினார்.

மேலும் மதுரை வீரன் என்ற எம்ஜிஆர் நடித்த திரைப்படத்தை யாராலும் மறக்க முடியாது என்றும் காங்கிரஸ் அரசு எம்ஜிஆர் அரசை கலைத்த பிறகு அவர் நேராக வந்தது மதுரைக்கு தான் என்றும் கூறினார். மோடியின் பேச்சில் மதுரை சம்பந்தப்பட்டவை அதிகம் இருந்ததால் அந்த பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version