தொழில்நுட்பம்

பேஸ்புக் பரிதாபம்.! 6.8 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் புகைப்படங்கள் லீக்.!

Published

on

பேஸ்புக் நிறுவனத்திற்கு 2018 ஆம் ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே இருந்திருந்தது. வருடத்தின் இறுதியை நெருங்கிவிட்ட நிலையில் தற்பொழுது இன்னொரு பெரிய பிரச்சனையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியுள்ளது.

6.8 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் புகைப்படங்கள் நெட்டில் லீக் ஆகியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் தற்பொழுது நடந்துள்ள அசம்பவத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளது.

பேஸ்புக் தளத்தில் அப்லோட் செய்யப்படும் புகைப்படத்தை மற்ற மூன்றாம் தரப்பு செயலிகள் எளிதில் அணுகுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் முழுவதும் உள்ள அக்கௌன்ட்களில் இருந்து சுமார் 6.8 மில்லியன் கணக்குகளில் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது.

பேஸ்புக் இல் பதிவிடப்படும் புகைப்படங்களை அணுக முடியாத அளவில் பாதுகாப்பு முறை வழங்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் இப்பொழுது புகைப்படங்களை அணுகுவதற்குத் தனது புகைப்பட API இல் ஒரு பிழை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பக் பேஸ்புக் லாகின் பயன்படுத்தி தங்கள் புகைப்படங்களை அணுக மற்ற மூன்றாம் தரப்பு பயன்பாடுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதே காரணம் என்பது தெரியவந்துள்ளது. இந்தச் சிக்கல் சரி செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும் 6.8 மில்லியன் பயனர்களின் புகைப்படங்கள் லீக் ஆகியதில் மாற்றம் ஏதும் இல்லை.

பிரச்சனைக்குக் காரணமான 876 டிவோலேப்பர்களின் 1500 செயலிகள் 6.8 மில்லியன் பயனர்களின் டைம்லைன் புகைப்படங்கள் மற்றும் பேஸ்புக் இல் பதிவேற்றம் செய்துள்ள புகைப்படங்களை அணுகியுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது . இந்த அசம்பவத்திற்கு பேஸ்புக் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது இதனை தடுக்க அடுத்த வாரம் தனி டூல் ஒன்றை வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version