இந்தியா

புத்தி இருக்கா? கழுதை மேய்ச்சீங்களா? ஜெகன் – சந்திரபாபு கடும் வாக்குவாதம்!

Published

on

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கும் ஆந்திர சட்டசபையில் இன்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இருவரும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினர்.

ஆந்திர சட்டமன்றத்தில் இன்று மாநிலத்தின் வறட்சி தொடர்பாக பேசிய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்க முந்தைய தெலுங்கு தேசம் அரசாங்கம் ஒரு பைசாவைக் கூட ஒதுக்கவில்லை என தெலுங்கு தேசத்தையும் சந்திரபாபு நாயுடுவையும் கடுமையாகக் குற்றம்சாட்டிப் பேசினார். இதற்கு தெலுங்கு தேசம் கட்சியினர், முதலமைச்சர் தனது தகுதியை மீறி செயல்படுவதாகவும், விவசாய கடன் வழங்குவதில் தவறான தகவல்களை கூறுவதாகவும் குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டிக்கும், சந்திரபாபு நாயுடுவுக்கும் நேரடி வாக்குவாதம் ஏற்பட்டது. ஜெகன் மோகன் ரெட்டி பேசிக்கொண்டிருக்கும் போது தெலுங்கு தேசம் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவர்களை பார்த்து ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசமாக பேசினார். உங்களுடைய பார்வைக்கெல்லாம் பயப்படுபவன் அல்ல நான். என்னிடம் 150 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களை அனைவரும் எழுந்து நின்றால் தாங்க மாட்டீர்கள். ஒருவர் வளர்வதால் மட்டுமே பெரிய ஆள் கிடையாது. முதலில் புத்தி வளரவேண்டும் என்றார்.

சந்திரபாபு நாயுடு பேசும்போது, நான் 35 ஆண்டுகளாக எம்எல்ஏவாக இருக்கிறேன். இப்படி ஒரு அவல நிலையை இதற்கு முன்பு பார்த்ததில்லை. தெலுங்கானாவில் அணைகள் கட்டப்படுவதை கேட்டால், கடந்த முறை நீங்கள் ஆட்சியில் இருக்கும் போது கழுதை மேய்த்தீர்களா என்று ஜெகன் மோகன் ரெட்டி கேட்கிறார். அமைச்சர் ஒருவர் எப்போதும் பிணத்தை போல் இருக்கிறீர்களே என்று கூறுகிறார் என குற்றம் சாட்டினார்.

Trending

Exit mobile version