வணிகம்

பிளிப்கார்ட்டில் இருந்து வெளியேறிய சச்சின் பன்சாலின் அடுத்த 1 பில்லியன் டாலர் திட்டம் என்ன தெரியுமா?

Published

on

இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனம் வால்மார்ட்க்கு விற்கப்பட்ட பிறகு அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரி மற்றும் இணை நிறுவனருமான சச்சின் பன்சால் வெஞ்சர் கேப்பிட்டல் எனப்படும் முதலீடு நிறுவனம் ஒன்றை துவங்கியுள்ளார்.

இந்த வெஞ்சர் கேப்பிட்டல் நிறுவனத்தின் கீழ் தற்போது 700 மில்லியன் டாலர் ரூபாயினை முதலீடு செய்ய உள்ளதாகவும் அதுவே 2018 இறுதிக்குள் 1 பில்லியன் டாலர் வரை அதிகரிக்கும் என்றும் செய்தி சுருள் தளத்திற்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

பிளிப்கார்ட் நிறுவனத்தினை விட்டு சச்சின் பன்சால் வெளியேறிய போது இவருக்கு 1 பில்லியன் டாலர் திரும்பக் கிடைத்துள்ளது. அது மட்டும் இல்லாமல் செயற்கை நுண்ணறிவு நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்து நிர்வகிக்க உள்ளார் என்று தெரியவந்துள்ளது.

சச்சின் பன்சாஸ் ஏற்கனவே பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் க்யூர் ஃபிட், ரெண்ட் மோஜோ போன்ற பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version