சினிமா செய்திகள்

நிர்வாணமாக சாலையில் ஸ்கூட்டர் ஓட்டிய அவெஞ்சர்ஸ் நடிகர்!

Published

on

அவெஞ்சர்ஸ் படத்தில் கேப்டன் அமெரிக்காவின் நண்பராக வரும் விண்டர் சோல்ஜர் கதாபாத்திரத்தில் நடித்த சபாஸ்டியன் ஸ்டான், க்ரீஸ் நகரத்தில் நிர்வாணமாக பைக் ஓட்டும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

முதலில் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அந்த நடிகரை வசை பாட ஆரம்பித்தனர். பின்னர், படக்குழு வெளியிட்ட ஷூட்டிங் ஸ்டில்களை பார்த்த பின்னர் தான் தெரிந்தது. அது இவர் நடித்து வரும் Monday எனும் புதிய படத்தின் ஷூட்டிங் புகைப்படங்கள் என்று.

க்ரீஸ் நாட்டில் உள்ள ஏதென்ஸ் நகரில் மக்கள் அதிகம் நடமாடும் சாலையில் சபாஸ்டியன் ஸ்டான் மற்றும் நாயகி டெனிஸ் கவ் முழு நிர்வாணமாக ஸ்கூட்டரில் செல்லும் காட்சிகள் கடந்த புதனன்று படமாக்கப்பட்டன. இதன் புகைப்படங்கள் வெளியாகி தற்போது வைரலாகியுள்ளன.

மீடூ சர்ச்சைகள் ஹாலிவுட்டில் புயலை கிளப்பினாலும், நிர்வாண காட்சிகளும், பொதுமக்கள் முன்னிலையிலேயே படமாக்கப்படும் சம்பவங்களும் அங்கு சர்வ சாதாரணமாகவே நடந்து வருகிறது

seithichurul

Trending

Exit mobile version