சினிமா

’நா கையத் தட்ட உண்டாச்சு உலகம்’ – வைரலாகும் உல்லாலா பாடல்!

Published

on

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள பேட்ட படத்தின் செகண்ட் சிங்கிளான உல்லாலா பாடல் நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது.

அனிருத் இசையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மாஸ் தத்துவ பாடலாக உல்லாலா பாடல் ரசிகர்களுக்கு எனர்ஜி பூஸ்ட் கொடுத்து வருகிறது.

பாடல் வெளியிடப்பட்ட 14 மணி நேரத்தில் 2 மில்லியன் ரசிகர்கள் இந்த பாடலை பார்த்துள்ளனர். முன்னதாக வெளியான முதல் சிங்கிளான மரண மாஸ் பாடல் 4 நாட்களில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது.

இந்த பாடலில், ரஜினி ‘நா கையத் தட்ட உண்டாச்சு உலகம்.. நான் சொன்ன பக்கம் நிக்காம சுழலும்’ என மீண்டும் தத்துவ பன்ச்களுடன் பாடி, பாபா ஷங்கர் மாஸ்டரின் செம்ம ஸ்டெப்பில் ஆட்டமும் போடுகிறார்.

 

Trending

Exit mobile version