சினிமா செய்திகள்

டிஎன்பிஎல் வர்ணனையின் போது சாதி குறித்துப் பேசிய ரெய்னா- வலுக்கும் கண்டனங்கள்!

Published

on

டிஎன்பிஎல் கிரிக்கெட் வர்ணனையின் போது சாதி குறித்துப் பேசிய இந்தியக் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கு எதிராகக் கண்டனங்கள் வலுத்து வருகின்றன.

டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியாக லைகா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. இந்தப் போட்டியின் வர்ணனையின் போது வர்ணனையாளர்கள் சுரேஷ் ரெய்னாவை நேர்காணல் செய்தனர். அப்போது சென்னைக்கும் சுரேஷ் ரெய்னாவுக்குமான பந்தம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு சுரேஷ் ரெய்னா பதில் அளிக்கையில், “நான் ஒரு ப்ராமணன். சென்னை அணிக்காக 2004-ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறேன். நான் ப்ராமணன் என்பதால் எனக்கு சென்னையை மிகவும் பிடித்துவிட்டது. எனக்கு என் அணியினரையும் பிடிக்கும். ஶ்ரீகாந்த், பத்ரி, பாலாஜி ஆகியோருடன் இணைந்து பணியாற்றி உள்ளேன். எனக்கு சிஎஸ்கே அணியில் நிறைய சுதந்திரம் உண்டு. நிறைய விஷயங்களைப் புதிதாக செய்ய முடியும். எனக்கு சென்னையின் கலாசாரம் மிகவும் பிடித்துள்ளது” எனக் குறிப்பிட்டு பேசினார்.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் அனைவரும் ட்விட்டரில் ரெய்னாவுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ‘ப்ராமணர் என்பதால் சென்னையைப் பிடிக்கும் என்றால் நீங்கள் இன்னும் சென்னையை பற்றி இத்தனை ஆண்டுகள் விளையாடியும் தெரிந்து கொள்ளவில்லை’ என்றும் ‘ஒரு விளையாட்டு நிகழ்ச்சியில் மேல் சாதி பெருமை பேசுவதா?’ என்பது போன்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

seithichurul

Trending

Exit mobile version