சினிமா

செல்வாக்கை இழந்து விட்டது பாஜக – சூப்பர்ஸ்டாரே சொல்லிட்டாரு!

Published

on

சமீபத்தில், ஒருத்தரை பத்து பேரு சேர்ந்து எதிர்த்தா யார் பலசாலி என மோடிக்கு ஆதரவாக பேசிய நடிகர் ரஜினி, ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பின்னர், பாஜக செல்வாக்கை இழந்துவிட்டது என செய்தியாளர்களிடம் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

நாளை ரஜினியின் 68வது பிறந்த நாள் கோலாகலமாக அவரது ரசிகர்களால் கொண்டாடப்படவுள்ளது. எப்போதுமே, தனது பிறந்த நாளன்று ரஜினி சென்னையில் தங்க மாட்டார்.

மும்பையில் நடைபெறவுள்ள அவரது உறவினர் திருமணத்திற்கு செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த அவரை, மடக்கிய செய்தியாளர்கள், ஐந்து மாநில தேர்தல் குறித்த கேள்வியை எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ரஜினி, இந்த முடிவு பாஜக செல்வாக்கை இழந்ததையே உணர்த்துகிறது என்று தெரிவித்து விமானத்தை பிடிக்க சென்றார்.

seithichurul

Trending

Exit mobile version