தொழில்நுட்பம்

சிறப்பு பிளாஷ் சேல்ஸ் விற்பனை மற்றும் சலுகை விபரம்.!

Published

on

போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் சிறப்பு சலுகையில் விற்பனை செய்யப்படுமென்று சியோமி நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனது டிவிட்டர் பக்கத்தில் சியோமி நிறுவனம் வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் டிசம்பர் 8 ஆம் தேதி வரை போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் சலுகை விலையில் பிளிப்கார்ட் மாற்று Mi.com வலைத்தளத்தில் விற்பனை செய்யப்படுமென்று அறிவித்துள்ளது.

போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் இன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.2000 சலுகையுடன் வெறும் ரூ.19,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படும். போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் இன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.2000 சலுகையுடன் வெறும் ரூ.21,999 என்ற விலையிலும் மற்றும் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.5000 சலுகையுடன் வெறும் ரூ. 25,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

நீங்கள் வாங்கும் ஒவ்வொரு போக்கோ எப்1 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ரூ.2000 முதல் ரூ.5000 வரை சிறப்பு சலுகை வழங்கப்டுகிறதென்பது கூடுதல் சிறப்பு. போக்கோ எப்1 அர்மர்டு ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் ரூ.4000 சலுகையுடன் வெறும் ரூ.26,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version