தொழில்நுட்பம்

சமூக வலைத்தளம் மற்றும் டிவிட்டரில் இந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.

Published

on

ஆன்லைன் இல் சாப்பாடு ஆர்டர் செய்யும் நண்பர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ் கிடைத்துள்ளது. தினமும் கூப்பன் கோடுகளைப் பயன்படுத்தி பிரியாணி சாப்பிட்ட உங்களுக்கு சோமாட்டோ எப்படி உணவுகளை “டேஸ்ட் டெஸ்ட்” (Taste Test) செய்து டெலிவரிக்கு அனுப்புகிறது என்ற நேரடி வீடியோ ஒன்று டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளம் மற்றும் டிவிட்டரில் இந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.

சோமாட்டோ செயலி அண்மையில் நகரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. சோமாட்டோ நிறுவனம் தனது செயலி மூலம் ஆர்டர் செய்யும் ஆர்டர்களுக்கு பலவித சலுகைகளை வழங்கிவந்துள்ளது. அத்துடன் உங்கள் உணவு எங்கு உள்ளது, எவ்வளவு நேரத்தில் டெலிவரி செய்யப்படுமென்ற கண்காணிப்பு முறையையும் அறிமுகம் செய்தது.

உணவுகளைக் கண்காணிக்க வசதிகளை மேற்கொண்ட சோமாட்டோ நிறுவனம், அவர்களின் ஊழியர்கள் செயல்களை கவனிக்க மறந்துவிட்டது. சோமாட்டோ ஊழியர் ஒருவர் டெலிவரி செய்யவேண்டிய பார்சல்களை நடுரோட்டில் திறந்து சாப்பிடும் வீடியோ ஆதாரம் தற்பொழுது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சோமாட்டோ டெலிவரி ஊழியர் தான் டெலிவரி செய்ய வேண்டிய பார்சல்களை ஒன்றின் பின் ஒன்றாகத் திறந்து சாப்பிட்டு “டேஸ்ட் டெஸ்ட்” செய்து பத்திரமாக முடி வைத்துவிட்டு. மறுபடியும் வேறொரு பார்சலை எடுத்து கொஞ்சமாக சாப்பிட்டு டெலிவரி பாக்ஸ் உள்ள வைத்துவிட்டார்.

கூடுதல் சிறப்பு என்னவென்றால், சாப்பிட்டு முடித்த பின் சோமாட்டோ சீல் டேப்பை பயன்படுத்தி பார்சல்களை மிகக் கச்சிதமாக சீல் செய்து ஆர்டர் செய்தவருக்கு டெலிவரி செய்ய கிளம்பிவிட்டார். ரோட்டில் சென்ற ஒருவர் இதை வீடியோ எடுத்து டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்தப் பதிவு அதிகப்படியான முறை ரீடிவீட் செய்யப்பட்டுள்ளது, தற்பொழுது வைரல் ஆகிவருகிறது.

Trending

Exit mobile version