தமிழ்நாடு

கொரோனா தொற்று எதிரொலி: டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு முதல் அலையும் இந்த ஆண்டு இரண்டாம் அலையும் தீவிரமாக பரவி வரும் நிலையில் தினந்தோறும் தமிழகத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டும், நூற்றுக்கணக்கானோர் பலியாகியும் வருகின்றனர்
இந்த நிலையில் கொரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் ஆல்பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு மட்டும் நடத்தப்படுமா என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளது

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு நடத்தப்பட இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் ’கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழக அரசால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் கீழ்காணும் தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்படுகிறது. இந்த தேர்வுகள் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

1. முதன்மை தேர்வு

2. ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணியில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு

3. ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் ஜனவரி 2022ஆம் ஆண்டு பருவத்தில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு

மேற்கண்ட தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

 

 

Trending

Exit mobile version