கிரிக்கெட்
குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி: 4வது இடத்தை பிடித்தது!
இன்று நடைபெற்ற பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணி அபாரமாக வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்தது
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது
இதனை அடுத்து 169 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூர் அணி 18.4 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பெங்களூர் அணியின் விராட் கோலி மிக அபாரமாக விளையாடி 73 ரன்கள் எடுத்து ஆட்டநாயகன் விருதை பெற்றார்
இந்த வெற்றியின் மூலம் 16 புள்ளிகளுடன் பெங்களூரு அணி 4வது இடத்தை பிடித்து உள்ளதால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது என்பது கூறப்பட்டது