தமிழ்நாடு

கவச உடை அணிந்து வாக்களித்தார் கனிமொழி: புகைப்படம், வீடியோ வைரல்! Kanimozhi MP case her vote with corona kit dress

Published

on

திமுக எம்பி கனிமொழி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் செய்துவந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை முதல் தமிழகத்தில் தேர்தல் நடந்து வரும் நிலையில் 6 மணிக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நேரடியாக சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் கனிமொழி வாக்களிக்க வந்தார்..

அப்பல்லோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் வந்த அவர் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து வந்திருந்தார். அதேபோல் அவர் வாக்கு பதிவு செய்ய இருக்கும் வாக்குச் சாவடியில் உள்ள அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் கொரனோ பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது. மேலும் இந்த காட்சியை புகைப்படம் எடுக்கும் புகைப்படக்காரர் வீடியோ எடுப்பவர்களுக்கு கொரனோ பாதுகாப்பு உடை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா பாதுகாப்பு உடையுடன் வாக்குச்சாவடிக்கு வந்த கனிமொழி தனது வாக்கை பதிவு செய்து விட்டு அதன் பின் மீண்டும் அப்போலோ மருத்துவமனையின் ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார்.

seithichurul

Trending

Exit mobile version