சினிமா செய்திகள்
எல்லாருக்குமே ரெண்டு உயிர் இருக்கும்.. ஆனா முதல் உயிர் காலியான பிறகு தான் அது தெரியவரும் – மிரட்டும் கேம் ஓவர் டீஸர்!
அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடிகை டாப்ஸி நடிப்பில் உருவாகி உள்ள கேம் ஓவர் படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை டாப்ஸி, அதை தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2 உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்த டாப்ஸி, பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான பிங்க் மற்றும் பாட்லா உள்ளிட்ட கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து, பாலிவுட்டில் முன்னணி நடிகையாக முன்னேறியுள்ளார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் டாப்ஸியின் கேம் ஓவர் படத்தின் டீஸர் இன்று மதியம் 12 மணிக்கு ரிலீஸ் செய்யப்பட்டது.
நயன்தாரா நடிப்பில் வெளியான மாயா படத்தை இயக்கிய அஷ்வின் சரவணன், இயக்கத்த்தில் மீண்டுமொரு மிரட்டலான ஹாரர் படமாக கேம் ஓவர் உருவாகியுள்ளது. அடுத்த மாதம் ஜூன் 14ம் தேதி கேம் ஓவர் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் நேரடி ரிலீசாகவும் ஹிந்தியில் டப்பிங் செய்யப்பட்டும் வெளியாக உள்ளது.