தமிழ்நாடு

‘எதே… தை 1 புத்தாண்டா..?’- கனிமொழியை நேரடியாக எதிர்க்கும் கார்த்தி சிதம்பரம்!

Published

on

திமுக கூட்டணியிலேயே இருந்து கொண்டு அக்கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் கனிமொழியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கார்த்தி சிதம்பர்ரம் எம்.பி.

‘தைப் பொங்கல் என்பது தமிழர்களுக்கு மிக முக்கியமான விழாவாகும். இது நம் அடையாளம் மற்றும் பண்பாடு ஆகும். தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தது கலைஞர் அவர்கள். தமிழரின் அடையாளத்தை மீட்க அவர் அப்படியொரு அறிவிப்பை வெளியிட்டார். அவரின் ஆட்சிக்குப் பின்னர் அது மீண்டும் சித்திரைக்கு மாற்றப்பட்டது.

தற்போது தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும். ஆட்சியில் திமு கழகம் அமர்ந்தவுடன், தை முதல் நாள் மீண்டும் தமிழ்ப் புத்தாண்டாக அறிவிக்கப்படும். கலைஞர் வழியில் வந்த ஸ்டாலின் அதற்குரிய அறிவிப்பை வெளியிடுவார்’ என்று சென்னை, தியாகராய நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அதிரடியாக பேசினார் கனிமொழி.

அவரின் இந்த அறிவிப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. பெரும்பாலும் இந்த அறிவிப்புக்கு திமுகவுக்கு எதிரணியில் இருப்பவர்கள்தான் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் திமுக கூட்டணியிலேயே இருந்து கொண்டு கனிமொழியின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருக்கும் கார்த்தி சிதம்பரம்.

சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரான கார்த்தி சிதம்பரம், ‘சித்திரை 1 தான் புத்தாண்டு. அறிவியல் பூர்வமான பாரம்பரிய நாட்காட்டியைப் பயன்படுதுவோர் அனைவரும் இதை ஏற்றுக் கொள்கிறார்கள். ஜாதக ரீதியிலும் சித்திரைதான் புத்தாண்டின் பிறப்பு ஆகும்’ என்று எதிர் கருத்துக் கூறியுள்ளார்.

சித்திரை 1 என்பது சமஸ்கிரதப் புத்தாண்டு என்று பரவலாக அறியப்படும் நிலையில், கார்த்தி சிதம்பரம் இப்படியாக கருத்தைக் கூறியுள்ளார்.

 

seithichurul

Trending

Exit mobile version