தமிழ்நாடு

உலகில் வேகமாக வளரும் சிட்டி எது? ஆக்ஸ்போர்டின் அறிக்கையில் ஆச்சர்யம்!

Published

on

சென்னை: உலகில் வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலை ஆக்ஸ்போர்ட் எகனாமிக்ஸ் அமைப்பு வெளியிட்டு இருக்கிறது.

உலகம் முழுக்க தற்போது நகரங்களில் உருவாகும் புதிய நிறுவனங்கள , வேலை வாய்ப்பு, மக்கள் தொகை, பணிசூழல் ஆகியவற்றை வைத்து இந்த ஆக்ஸ்போர்ட் அறிக்கை வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்திய நகரங்கள்தான் 2030களில் பெரிய வளர்ந்த நகரங்களாக இருக்கும் என்று கூறியுள்ளது. .

முதல் இடத்தில் வைர வியாபாரம் செழித்து வளரும் சூரத் நகரம் இருக்கிறது. சூரத் 2030ல் பெரிய வளர்ச்சியை சந்தித்து இருக்கும் என்கிறார்கள். அடுத்த இடத்தை ஆக்ரா பிடித்துள்ளது. பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர் அடுத்தடுத்த இடங்களை பிடித்து இருக்கிறது.

இதில் தமிழகம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த பட்டியலில் 6வது இடத்தில் திருப்பூர் இருக்கிறது. உலகிலேயே 6 வது பெரிய வேகமாக வளரும் நகரம் திருப்பூர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னலாடை புரட்சி மூலம் இது சாத்தியமாகி உள்ளது.

7வது இடத்தில் ராஜ்கோட் உள்ளது. உலகிலேயே வேகமாக வளரும் நகரங்களின் பட்டியலில் 8வது இடத்தில் திருச்சி உள்ளது. சென்னை 9வது இடத்தில் உள்ளது. விஜயவாடா பத்தாவது இடத்தை பிடித்து இருக்கிறது.

 

 

 

 

author avatar
seithichurul

Trending

Exit mobile version