இந்தியா

உருமாறிய கொரோனாவைத் தடுக்கும் Covaxin – குட் நியூஸ் மக்களே!!

Published

on

கோவிட்-19 என்னும் வைரஸ் மூலம் உருமாறிய கொரோனாவை மட்டுமின்றி அதனது பல ரகங்களையும் தடுக்கும் வல்லமை கொண்டதாக இந்தியாவில் தயார் செய்யப்பட்டுள்ள கோவேக்‌ஷின் உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதன் அடிப்படையில் SARS-CoV-2 வைரஸின் பல ரகங்களையும் தடுக்கும் திறன் கொண்டதாக கோவேக்‌ஷின் தடுப்பூசி உள்ளதாம். பாரத் பயோடெக் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள கோவேக்‌ஷின் அவசர கால கொரோனா சிகிச்சைக்கு ஏற்ற மருந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டுமல்லாது பல வெளிநாடுகளிலும் கோவேக்‌ஷின் அவசர கால கொரோனா தடுப்பு மருந்தாக ஏற்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் சார்பில் SARS-CoV-2, பிரிட்டன் ரகம் , பிரேசில் ரகம் மற்றும் தென் ஆப்பிரிக்கா ரகம் எனப் பிரிக்கப்பட்டு கண்டறியப்பட்டுள்ளது. ஆராய்ச்சியின் படி இந்த அத்தனை ரகங்களுக்கும் தடுப்பு மருந்தாக கோவேக்‌ஷின் செயல்படுவதாக ஆய்வு நிருபித்துள்ளது.

Trending

Exit mobile version