தொழில்நுட்பம்

இப்படியொரு பேட்டரியா! இத பார்த்தா நோக்கியா போனையே வாங்க மாட்டீங்க!!

Published

on

வரும் 15ஆம் தேதி நோக்கியா ஆண்ட்ராய்டு கோ என்ற புதிய ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது.

நோக்கியா மொபைல் போன்களை தயாரித்துவரும் எச்எம்டி குளோபல் நிறுவனம் புதிதாக ஆண்ட்ராய்டு கோ என்ற புதிய ஸ்மார்ட்போனை வரும் டிசம்பர் 15ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்த மொபைல் முதலில் சீனாவில்தான் விற்பனைக்கு வருகிறது.

சமூக வலைத்தளமான வெய்போவில் அந்நிறுவனம் இந்த மொபைல் குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

நோக்கியா சி 1 மற்றும் நோக்கியா சி 2 ஆகிய ஆண்ட்ராய்டு கோ வர வரிசை மொபைல்கள் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக வருகிற 15ஆம் தேதி அறிமுகமாகும் மொபைர் இருக்கும் என்றும் அதற்கு நோக்கியா சி3 என்ற பெயர் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது சீனாவில் நோக்கியாவின் ஆண்ட்ராய்டு கோ வரிசையில் ஆண்ட்ராய்டு 10 ஓ.எஸ். உடன் வெளியாகும் முதல் மொபைலாக இருக்கும். ஆண்ட்ராய்டு கோ வரிசை மொபைல்கள் கூகுள் நிறுவனத்தின் அப்ளிகேஷன்களை சார்ந்து செயல்படக்கூடியவை. ஆனால், சீனாவில் கூகுள் நிறுவனத்தின் அப்ளிகேஷன்கள் வேலை செய்யாது. இந்த சிக்கலை சரிசெய்ய நோக்கியாவின் புதிய மொபைலில் வழி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து நோக்கியா 5.4 மற்றும் நோக்கியா 9.3 ப்யூர்வியூ ஆகிய ஸ்மார்ட்போன்களும் சந்தைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் நோக்கியா 5.4 பட்ஜெட் போன் வகையைச் சேர்ந்தது என்று சொல்லப்படுகிறது. மேலும், நோக்கியா 9.3 ப்யூர்வியூ மாடல் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் வெளியிடப்படலாம் என்றும் தெரியவருகிறது.

Trending

Exit mobile version