கிரிக்கெட்

ஆஸி., சாம்ராஜ்யத்தைத் தகர்ந்த இந்தியா… ஓவர் டைம் பார்த்து மீம்ஸ் தெறிக்கவிட்ட நெட்டிசன்ஸ்

Published

on

இரண்டு மாதங்களுக்கு மேல் நடந்து வந்த இந்திய – ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான தொடர் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்றது. அதில் ஆஸ்திரேலிய அணி 2- 1 என்ற ரீதியில் வென்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் டி20 தொடரை இந்திய அணி, 2- 1 எனக் கைப்பற்றியது.

இதையடுத்து 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமானது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும், இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவும் வென்றன. மூன்றாவது போட்டி டிரா ஆனது. 4வது மற்றும் கடைசி போட்டியில், நேற்று இந்திய அணி, த்ரில் வெற்றி பெற்றது. காபாவில் இந்த ஆட்டம் நடந்தது. காபா மைதானத்தில் கடந்த 32 ஆண்டுகளாக ஒரு போட்டியில் கூட ஆஸ்திரேலியா தோல்வியடைந்தது கிடையாது. ஆனால், ஆட்டத்தையும் வென்று தொடரையும் கைப்பற்றி ஆஸ்திரேலிய சாம்ராஜ்யத்துக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளது இந்திய அணி.

இந்திய வெற்றியைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மீம்ஸ்களை தெறிக்க விட்டுள்ளனர்.

அந்த மீம்ஸ் தொகுப்பு இதோ:

Trending

Exit mobile version