உலகம்

ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத மழைப்பொழிவு- வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனா!

Published

on

ஆயிரம் ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சீனா பெரு மழையினாலும் வெள்ளத்தாலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கடும் மழை பெய்து வருகிறது. சாலைகள் எங்கும் வெள்ள நீர் ஓடுவதால் பல சாலைகள் நீரில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. இதனால் சீனாவின் பல மாகாணங்களும் தனித் தீவுகளாகத் துண்டுபட்டுப் போயுள்ளன. மீட்புப் பணிகள், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அடுத்த மூன்று நாட்களுக்கும் மழை தொடரும் என சீன வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பெரு மழைக்கு ஏற்கெனவே அரசு வெளியிட்டுள்ள கணக்கின்படி 16-க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். சீனாவில் அதிகப்படியாகவே ஒரு மாகாணத்தில் ஆண்டுக்கு 640.8 மிமி மழை அளவு தான் பதிவாகும். ஆனால், நேற்று ஒரு நாளில் மட்டும் சீனாவின் ஜென்சோ பகுதியில் 457.5 மிமி மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

வரலாறு காணாத இந்த மழைப் பொழிவு சீன வரலாற்றிலேயே பெரும் பேரிடர் ஆகப் பதிவாகியுள்ளது. இன்னும் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை இருப்பதால் கடும் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது சீன அரசு.

Trending

Exit mobile version